2024 ஜனாதிபதி தேர்தலுக்கு 8.5 பில்லியன் ரூபாய் நிதியை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2024 ஜனாதிபதி தேர்தலுக்காக 10 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 8.5 பில்லியன் ரூபாயை தேர்தல் ஆணையகம் கோரியுள்ளது.
இதேவேளை, தேர்தலுக்கு தேவையான நிதியை விடுவிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் நிதியமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இந்த நிதியை எந்தவித தாமதமும் இன்றி விடுவிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நிதி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.