ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில் கறுப்பு ஜூலை படுகொலையின் 41 ஆண்டு நினைவேந்தல்
8 months ago
















கறுப்பு ஜூலை படுகொலையின் 41 ஆம் ஆண்டுநினைவேந்தலும் பொதுக் கூட்டமும் யாழில் இன்று சனிக்கிழமை (27) நடைபெற்றது.
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் ஏற்பாட்டில், யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்க மண்டபத்தில் இவ் நினைவேந்தல் கடைப்பிடிக்கப்பட்டது.
கடந்த 1983 ஆம் ஆண்டு ஜூலை 25-27 ஆம் திகதிகளில் வெலிக்கடைச் சிறையில் படுகொலை செய்யப்பட்ட 53 அரசியற் கைதிகள் உள்ளிட்ட அனைவரையும் நினைவுகூர்ந்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் வெலிக்கடை சிறையில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுச் சுடரை ஏற்றி வைத்ததைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஏனையவர்களும் சுடரேற்றி மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
