அமெரிக்காவின் உட்கியாஸ்விக் நகரில் 64 நாள்களுக்கு சூரிய உதயம் இல்லை.
அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட் கியாஸ்விக் நகர மக்கள் இந்த ஆண்டின் இறுதி சூரிய அஸ்தமனத்தை நேற்று முன்தினம் அவதானித்துள்ளனர்.
மேலும், நேற்று முன்தினம் இறுதி சூரிய அஸ்தமனத்தைத் தொடர்ந்து 64 நாள்களுக்கு அடிவானத்திற்கு மேல் சூரியன் உதிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உட்கியாஸ்விக்கில் கிட்டத்தட்ட 5,000 பேர் நேற்று முன்தினம் இறுதியாக சூரிய உதயத்தை அவதானித்தனர்.
அமெரிக்காவின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள அலாஸ்காவின் உட்கி யாஸ்விக் நகரம், வடதுருவத்தை அண்மித்து அமைந்துள்ள பகுதியாகும்.
இங்கு ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதியன்று சூரியன் மறையும்.
மீண்டும் அடுத்த ஜனவரி மாதத்தின் மூன்றாவது அல்லது நான்காவது வாரத்தில் தான் சூரியன் உதயமாகும்.
அதுவரையிலான 2 மாதங்கள் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் முழுமையாக இருளிலேயே வசிக்க வேண்டும்.
பூமி சூரியனை நோக்கி 23 பாகை சாய்வாக இருப்பதன் காரணமாக வடதுருவத்திலுள்ள சில பகுதிகளில் முழு இரவு அல்லது முழு பகல் ஏற்படுவதுண்டு.
இவ்வாறு முழுமையாக 2 மாதங்கள் இருளாக இருக்கும் நிகழ்வை போலார் நைட்ஸ் அல்லது துருவ இரவு என்று அழைக்கிறார்கள்.