வடக்கு மக்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ முறையிடலாம் ஆளுநர் செயலகம் அறிவிப்பு
6 months ago

வடக்கு மாகாண மக்கள் தங்கள் குறைகளை ஆளுநரிடம் நேரடியாகவோ அல்லது 021 221 9375, 021 221 9376 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலமாகவோ முறையிடலாம் என்று ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது.
இதுவரை நாளும் வடக்கு ஆளுநரின் பொது மக்கள் குறைகேள் வலையமைப்பான ‘அபயம்' ஊடாகவே மக்களின் குறைகள் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட் டன.
இந்த நிலையில், அண்மையில் புதிதாக ஆளுநராக பதவியேற்ற ஆளுநர் நா.வேதநாயகன் அதனை நிறுத்தியுள்ளார்.
அத்துடன், தன்னிடமே மக்கள் நேரடியாக குறைகளை முறையிட முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
