சமஸ்டி குறித்து சஜித்தின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டால் எமது நிலைப்பாட்டை பரிசீலிக்க முடியும்.- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவிப்பு.

4 months ago


ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை ஐக்கியமக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிட்டால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் என தமிழ்தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் ஆதரவை கோரி சஜித்பிரேமதாச அனுப்பிய கடிதத்திற்கான பதில் கடிதத்திலேயே தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதனை தெரிவித்துள்ளது.

வேட்பாளராகிய நீங்கள் கடந்த 76 வருடங்களாக இலங்கையின் தோல்விக்கு காரணமான ஒற்றையாட்சி முறையை ஒழித்து சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டு வருவதன் மூலம் மாத்திரமே அனைத்து இனங்களையும் அரவணைத்து இந்த நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற உண்மையை தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வெளியிடுவதன் மூலம் நாட்டின் இனப்பிரச்சினை தீர்ப்பதற்கு நீங்கள் மேற்கூறிய விடயங்களின் அடிப்படையில் தீர்வை காணவிளைகின்றீர்கள் என்பதை இந்த நாட்டு மக்களிற்கு நீங்கள் வெளிப்படுத்த வேண்டும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

அவ்வாறு தேர்தல் விஞ்ஞாபனத்தில் மேற்படி விடயங்களை தெளிவாகவும் முழுமையாகவும் உள்ளடக்கப்படும் நிலையில் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது என்ற எமது நிலைப்பாட்டினை பரிசீலனை செய்வது தொடர்பில் நாம் ஆராய முடியும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அண்மைய பதிவுகள்