சமூக ஊடகமான எக்ஸில் ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தான் கனடாவின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக தெரிவிப்பு

17 hours ago



சமூக ஊடகமான எக்ஸில் ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தான் கனடாவின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக தெரிவிப்பு

இந்திய வம்சாவளியினரான எம்.பி பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

கனடா பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில், அடுத்த பிரதமர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்திய வம்சாவளியினரான நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர். பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனுதாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் பதவியில் போட்டியிடுவதற்காக வேட்பு மனு தாக்கல் செய்துள்ள அந்த இந்திய வம்சாவளி நாடாளும்னற உறுப்பினரின் பெயர், சந்திரா ஆர்யா.

சந்திரா ஆர்யா, இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள தும்கூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

அவர், தார்வாடு என்னுமிடத்திலுள்ள கர்நாடகா பல்கலையில் முதுகலை வணிக மேலாண்மை பயின்றவர்.

அதற்குப் பிறகு கனடா வந்த சந்திரா ஆர்யா, 2015 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில் ஆர்யா வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், தான் கனடாவின் பிரதமர் பதவிக்காக போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்