யாழ். நாவாந்துறையில் இன்று (02) வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

3 months ago



யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியில் புதன்கிழமை (2) வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் வீட்டில் இருந்த பெறுமதியான பல பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன.

வீடு தீ பற்றி எரிவதனைக் கண்ட அயலவர்கள் தீயினை அணைக்க முற்பட்டதுடன், மாநகர சபை தீயணைப்பு படையினருக்கும் அறிவித்தனர்.

அதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர் தீயை அணைத்தனர்.

தீ விபத்துக்கு காரணம் கண்டறியப்படாத நிலையில் யாழ்ப்பாண பொலிஸார் மற்றும் தடயவியல் பொலிஸார் ஆகியோர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அண்மைய பதிவுகள்