வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவப் பெருந்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
தொடர்ந்து 16 தினங்கள் காலை, இரவு என இரு நேரங்களிலும் சிறப்புப் பூசைகள் இடம்பெறவுள்ளன.
ஆலயத்தின் சப்பரத் திருவிழா எதிர்வரும் 19ஆம் திகதி புதன்கிழமையும், 20 ஆம் திகதி வியாழக்கிழமை இரதோற்சவமும், 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை தீர்த்தோற்சவமும் இரவு கொடியிறக்கமும் இடம்பெற்று, 22 ஆம் திகதி சனிக்கிழமை தெப்போற்சவத்துடன் ஆலயத் திருவிழா நிறைவுபெறவுள்ளது.