
முல்லைத்தீவு - கேப்பாபிலவு பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் கடமையாற்றும் இராணுவ சிப்பாய் ஒருவர் மின்சாரம் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று(07.08.2024) இடம்பெற்றுள்ளது.
கேப்பாபிலவு பகுதியில் உள்ள ஆறாவது காலாட்படையில் கடமையாற்றும் கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய லான்ஸ் கோப்ரல் நிலையுடைய சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், அவரது உயிரிழப்பு தொடர்பில் இராணுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் சடலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
