கனடாவில் இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளான் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

7 months ago


கனடாவில் இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளான் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதில் லிஸ்டீரியா பாதிப்பு அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் சுகாதாரத்துறை மற்றும் கனடா உணவுப் பரிசோதனை அமைப்பு (CFIA) பொதுமக்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட எனோக்கி காளான்களை (Enoki mushrooms) உட் கொள்வதால் ஏற்படும் அபாயங்கள் குறித்து எச்சரிக்கின்றது.

இந்த எனோக்கி காளான்கள் Listeria monocytogenes என்ற பாதகமான பாக்டீரியாவால் மாசுபடக்கூடும் என கூறப்படுகிறது.

எனோக்கி காளான், நீளமாகவும் நெருக்கமாகவும் தோன்றி, சிறிய வெள்ளைத் தலையுடன் இருக்கும்.

இது, பெரும்பாலும் ஆசிய உணவு களில் பயன்படுத்தப்படும் முக்கியமான பொருளாக இருந்தாலும், சில சமயங்களில் பச்சையாக உண்ணப்படுவதால், அந்த உணவின் மூலம் நோய் பரவுவதற்கான அபாயம் அதிகரிக்கிறது.

கனடாவில் கிடைக்கக் கூடிய எனோக்கி காளான்கள் பெரும்பாலும் தென் கொரியா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.

2020-ம் ஆண்டிலிருந்து, இந்த நாடுகளிலிருந்து பல பிராண்டுகளின் காளான், லிஸ்டீரியா பாதிப்பு காரணமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்