பிரதமர் ரிசிசுனாக்கின் கென்சவேர்ட்டிவ் கட்சியை 14 வருடங்களிற்கு பின்னர் அதிகாரத்திலிருந்து அகற்றும் தொழிற்கட்சியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில் ஐக்கிய இராச்சியத்தில் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
கெய்ர் ஸ்டார்மெரின் தொழில்கட்சி பெரும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்புகள் தெரிவித்துள்ளன.
எட்டு வருடங்களில் ஐந்து பிரதமர்கள் ஆட்சி புரிந்த கென்சவேர்ட்டிவ் கட்சியின் உள்கட்சி மோதல் குழப்பநிலை முடிவிற்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று பிரிட்டன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம் என தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் வியாழக்கிழமை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார். மேலும் ஐந்து வருடங்கள் கென்சவேர்ட்டிவ் ஆட்சியை தாங்க முடியாது என தெரிவித்துள்ள அவர் நீங்கள் தொழில்கட்சிக்கு வாக்களித்தால் மாத்திரமே மாற்றம் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
இன்று பிரிட்டன் புதிய அத்தியாயத்தை ஆரம்பிக்கலாம் என தொழில்கட்சியின் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர் வியாழக்கிழமை அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐந்து வருடங்கள் கென்சவேர்ட்டிவ் ஆட்சியை தாங்க முடியாது என தெரிவித்துள்ள அவர் நீங்கள் தொழில்கட்சிக்கு வாக்களித்தால் மாத்திரமே மாற்றம் நிகழும் எனவும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் வாக்களிப்பு தினமான இன்று தொழில்கட்சி குறித்து மீண்டும் எச்சரிக்கை விடுத்த ரிசி சுனாக் தொழில்கட்சியினர் வரிகளை அதிகரிப்பார்கள் புவிசார் அரசியல் பதற்றம் காணப்படும் சூழலில் பிரிட்டனை பலவீனப்படுத்துவார்கள் என தெரிவித்துள்ளார்.