யாழ். தேர்தல் மாவட்டத்தில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகளாக 3 இலட்சத்து 97 ஆயிரத்து 41 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் 25 ஆயிரத்து 353 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட பதில் செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார்.
யாழ், மாவட்ட செயலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் 3 இலட்சத்து 71 ஆயிரத்து 688 செல்லுபடியான வாக்குகள் அளிக்கப்பட்டன.
வேட்பாளர்களான சஜித் பிரேமதாச 1இலட்சத்து 21 ஆயிரத்து 177 வாக்குகளும், பா.அரியநேத்திரன் 1 இலட்சத்து 16 ஆயிரத்து 688 வாக்குகளும், ரணில் விக்கிரமசிங்க 84 ஆயிரத்து 558 வாக்குகளும், அநுரகுமார திஸநாயக்க 27 ஆயிரத்து 086 வாக்குகளையும் பெற்றனர்.
அதேவேளை, ஏனைய வேட்பாளர்கள் மொத்தமாக 22 ஆயிரத்து 179 வாக்குகளையும் பெற்றுள்ளனர் என்றார்.