
யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பில் நேற்று மாலை பொலிஸில் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் செம்மணியில் உள்ள சிந்துபாத்தி இந்துமயானத்தில் அண்மையில் அபிவிருத்திப் பணிகளுக்காக நிலத்தைத் தோண்டியபோது மண்டையோடு உள்ளிட்ட மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.
இந்த விடயம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் மேற்படி விவகாரம் தொடர்பில் உரிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வலியுறுத்தி பொலிஸாரிடம் நேற்று முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் யாழ்.மாநகரசபை உறுப்பினரும், சிந்து பாத்தி மயான நிர்வாகசபை உறுப்பினருமான வை.கிருபாகரனால் இந்த முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை குறித்த பகுதிக்கு நேரடியாகச் சென்று பார்வையிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குறித்த மனித எச்சங்கள் இன்னுமொரு மனிதப் புதைகுழியா? என்பது தொடர்பில் தீவிரமாக ஆராயப்பட வேண்டுமென வலியுறுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
