கார்த்திகைப்பூ பதித்த பாதணிகளை மீளப்பெற்றது டி.எஸ்.ஜ நிறுவனம்

7 months ago

டி.எஸ்.ஐ காட்சியறையில் கார்த்திகைப் பூ படம் பொறித்த பாதணி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தமை தொடர்பில் எழுந்த சர்சைகளை அடுத்து அந்தப் பாதணிகளை முழுமையாக மீளப்பெறுவதாக டி.எஸ்.ஐ. நிறுவனத்தினர் அறிவித்துள்ளனர்.

எனினும் அச்சம்பவம் தொடர்பில் எதுவித மன்னிப்பும் கோரவில்லை.

கொழும்பு, வெள்ளவத்தை டி.எஸ்.ஐ. காட்சியறையில் கார்த்திகைப் பூ பொறிக்கப்பட்ட பாதணிகள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பில் பலரும் தமது எதிர்ப்புகளை வெளியிட்டிருந்தனர். வடமாகாண டி.எஸ்.ஐ. முகவர்களிடம் பல எதிர்ப்புகள் பொதுமக்களால் முன்வைக்கப்பட்டன.

அதையடுத்து அவற்றை டி.எஸ். ஐ. நிறுவனத்திற்கு வடக்கு முகவர்கள் தெரியப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பில் டி.எஸ்.ஐ. நிறுவனம் கடிதம் ஒன்றை வடக்கு முகவர்களுக்கு வழங்கியுள்ளது.

அக் கடிதத்தில் “நாடளாவிய ரீதியில் உள்ள விற்பனை காட்சிக்கூடங்களில் இருந்த கார்த்திகைப் பூ பொறித்த பாதணிகளை சந்தையில் இருந்து உடன் மீளப்பெற்றுக் கொண்டுள்ளதாகவும் டி.எஸ்.ஐ. நிறுவனமானது இலங்கையில் உள்ள எவருக்கும் உடல், உள ரீதியாக தீங்கிழைக்ககூடிய உற்பத்தியை மேற்கொள்வதோ அன்றி விநோயோகிப்பதோ ஒருபோதும் எங்கள் எண்ணமாக இருந்ததில்லை, இருக்காது என்பதை உறுதிபடக்கூறுகின்றோம். எமது கம்பணி அர்ப்பணிப்போடு செய்படுகிறது” என டி.எஸ்.ஐ. பொது முகாமையாளர் வடபகுதி முகவர்களுக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.