





















யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரையை அகற்றக் கோரி இன்றும் கவனயீர்ப்புப் போராட்டம்
யாழ்.தையிட்டியில் சட்டவிரோத விகாரைக் கட்டுமானத்தை உடனடியாக அகற்றுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வேண்டும் எனவும் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்ட காணிகளை உரிமையாளர்களிடம் உடனடியாக கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை (11) பி.ப 4.00 மணிக்கு கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.
இப்போராட்டம் பௌர்ணமி தினமாகிய இன்று ( 12) புதன்கிழமை மாலை 6.00 மணி வரை தொடரும்.
இப்போராட்டத்திற்கு பல கட்சிகளும் பேதங்களின்றி ஆதரவு வழங்கியுள்ளனர்.
எனவே, அனைத்து தமிழ் மக்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் சார்ந்தவர்களை இப்போராட்டத்திற்கு கட்சி பேதங்களின்றி அனைவரையும் கலந்து கொள்ளுமாறு தையிட்டி மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
