சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார தெரிவிப்பு.

5 months ago


சிறுவர்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் உதயகுமார அமரசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையான ஆறு மாத காலப்பகுதியில் சிறுவர்கள் தவறான நடத்தைக்கு உடற்படுத்தப்பட்டமை தொடர்பில் 290 முறைப்பாடுகள் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் மாதாந்தம் இவ்வாறான பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிறுவர்கள் தொடர்பான அதிகளவான முறைப்பாடுகள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பெறப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அண்மைய பதிவுகள்