ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
3 months ago
2024 ஜனாதிபதி தேர்தல் மக்கள் வாக்களித்து வரும் நிலையில் யாழ்ப்பாணத்தில் நண்பகல் 12 மணியளவில் 35 வீத வாக்குப் பதிவு இடம்பெற்றுள்ளதாக மாவட்ட செயலகம் அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 511 வாக்குச் சாவடிகள் அமைந்துள்ள நிலையில் மதியம் வரை 35 வீதம் வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளன.
சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.