நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு அளித்தமையால் நாய் ஒன்று உயிரிழந்தது- உரிமையாளரான பெண்ணுக்கு இரு மாத சிறை.

5 months ago


நியூசிலாந்தில் அளவுக்கு அதிகமாக உணவு அளித்தமையால் நாய் ஒன்று உயிரிழந்த சம்பவம் தொடர்பில் உரிமையாளரான பெண்ணுக்கு இரண்டு மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

நாய்க்கு அவர் தினமும் சராசரியான உணவை விட 10 இறைச்சி துண்டுகளை அதிகம் கொடுத்து வந்ததனால் அந்நாய்க்கு உடல் எடை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கம் அதை கண்டறிந்து அந்த நாயை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்தனர். 2 மாத சிகிச்சையில் 8.8 கிலோ குறைந்த பின்னரும் கல்லீரல் இரத்த கசிவால் அந்த நாய் இறந்து போனது. அதற்கு அதீத உடல் எடையே காரணமாக கூறப்படுகிறது.

இதனால் மானுகா மாகாணத்தின் நீதிமன்றம் நாயின் உரிமையாளருக்கு 1,222 நியூசிலாந்து டொலர் அபராதமும் இரண்டு மாதங்கள் சிறை தண்டனையும் ஓராண்டு காலத்திற்கு நாய் வளர்க்கும் உரிமையையும் இரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

"துரதிஷ்டவசமாக குறைந்த எடையுடைய பிராணிகளே அதிக இன்னல்களுக்கு ஆளாகும். ஆனால் அதற்கு நிகராக அதிக எடை கொண்ட பிராணிகளும் பல இன்னல்க சந்திக்க நேரிடுகிறது என விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சங்கத்தின் தலைவர் Todd west wood தெரிவித்துள்ளார்.

கால்நடை மருத்துவர்களால் நுக்கியின் அதிக எடை காரணமாக அவரது இதயத் துடிப்பைக் கண்டறிய முடியவில்லை. நாய்க்கு நிறைய தோல் வளர்ச்சிகள் இருந்தன, குறிப்பாக அவரது முழங்கைகள் மற்றும் வயிறு போன்ற தொடர்பு பகுதிகளில், மற்றும் அவரது நகங்கள் பெரிதாகி இருந்தது. மேலும், நுகிக்கு விழி வெண்படல அழற்சியும் இருந்துள்ளது.