ஜனாதிபதி அநுர வாக்குறுதியை நிறைவேற்றினால் ஒரு லீற்றர் டீசலை 100 ரூபாய்க்கு வழங்க முடியும் காஞ்சன தெரிவிப்பு.

3 months ago


ஜனாதிபதி அநுரகுமார வாக்குறுதியை நிறைவேற்றினால் ஒரு லீற்றர் டீசலை 100 ரூபாய்க்கு வழங்க முடியும் என்று முன்னாள் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜய சேகர கூறியுள்ளார்.

எரிபொருள் மீதான வரியை நீக்குவோம் என தற்போதைய        அரசாங்கம் தேர்தல் பரப்புரைகளில் கூறியது.

இதற்கமைய எரிபொருள் மீதான வரியை நீக்க வேண்டும் என்று கூறிய முன்னாள் அமைச்சர், எதிர்வரும் 30ஆம் திகதி இரவுக்குள் எரிபொருள் விலை திருத்தம் செய் யப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

மேலும், ஜனாதிபதித் தேர்தலை கருத்தில் கொண்டு இலங்கை தேர்தல் ஆணைக்குழுவின் உத்தர வின் பேரில் இடை நிறுத்தப்பட்டு கடந்த அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிவாரண நடவடிக்கைகளைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு முன்னாள் அமைச்சர் அரசாங்கத்துக்கு நன்றி தெரிவித்தார்.

அத்துடன், ஒக்ரோபர் மாதத்துக்கான மின்சார கட்டணத் திருத்தம் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகளால் ஏற்கனவே           தயாரிக்கப்பட்டுள்ளது.

அதனை தாமதமின்றி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கு அனுப்புமாறும் அரசாங்கத்திடம் விஜயசேகர கோரிக்கை விடுத்தார்.