திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல்
6 days ago
திருகோணமலையில் 2006 ஆம் ஆண்டு சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட 5 தமிழ் மாணவர்களின் 19 ஆம் ஆண்டு நினைவேந்தல் நேற்று மாலை திருகோணமலை கடற்கரையில் நடைபெற்றது.
இராவணன் சேனா அமைப்பின் தலைவர் கு.செந்தூரன் தலைமையில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேற்படி படுகொலைச் சம்பவம் திருகோணமலை கடற்கரையில் 02.01.2006 அன்று இடம்பெற்றது.
இலங்கை இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் இணைந்து இந்தப் படுகொலையைச் செய்தனர்.
இந்தச் சம்பவத்தில் லோகிதராசா ரொகான்,சண்முகராஜாசஜீந்திரன், மனோகரன் வசீகர், தங்கத்துரை சிவானந்தன், யோகராஜா கேமச்சந்திரன் ஆகிய தமிழ் மாணவர்கள் உயிரிழந்தனர்.