முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு வர்த் தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூரும் விதமாக புதுக்குடியிருப்பு பகுதியில் நேற்று புதன்கிழமை அஞ்சலி நிகழ்வொன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வர்த்தகத்தை மேற்கொண்டு உயிரிழந்த 15 வர்த்தகர்களின் படங்கள் வைக்கப் பட்டு அவர்களுக்கு ஈகைச் சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
உயிரிழந்த வர்த்தகர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க நிர்வாக உறுப்பினர்கள், வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்
தக்கது.