விபுலானந்த அழகியல் நிறுவகத்தில் புகைப்பட கண்காட்சி ஆரம்பமானது
கிழக்கு பல்கலைக்கழக மட் டக்களப்பு சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் 16ஆவது புகைப்படக் கண்காட்சி, சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக வளாகத்தில் ஆரம்பமானது.
மட்டக்களப்பு மண்ணின் வாழ்வியல் மற்றும் கலை கலாசாரத்தை மையப்படுத்தி எம். சிவகுமாரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களே காட்சிப்படுத்தப்பட்டன.
சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் போராசிரியர் பாரதி கெனடி புளோரன்ஸ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்தார்.
இந்தப் புகைப்பட கண்காட்சியானது எதிர்வரும் 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.