தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

4 months ago

தென்கொரியா தலைநகர் சியோல் பகுதியில் வீதியொன்றில் காணப்பட்ட குழிக்குள் கார் ஒன்று விழுந்ததில் இருவர் காயமடைந்துள்ளனர்.

70 வயதுடைய பெண்ணொருவரும் 80 வயதுடைய ஆணொருவருமே இந்த விபத்தில் காயமடைந் துள்ளனர் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால், அந்தப் பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்தக் குழி எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்