யாழ்.குருநகர் கடற்பரப்பில் 183 கிலோ கேரள கஞ்சாவுடன் படகொன்று இன்று (04) கைப்பற்றப்பட்டது.
4 months ago

யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து 183 கிலோ கேரள கஞ்சாவுடன் டிங்கி படகொன்று இன்று புதன்கிழமை (04) கைப்பற்றப்பட்டது.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
இருப்பினும், சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் 92 கேரள கஞ்சா பொதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.
மீட்கப்பட்ட படகு மற்றும் கஞ்சா பொதிகள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
