வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரத்தை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலேயே வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் ஏற்பாடு செய்துள்ளது.
நாட்டில் தங்கியிருக்கும் குறுகிய காலத்துக்காக இந்தச் சாரதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்படவுள்ளன.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில் விமான நிலையத் திலேயே தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அனுமதி பத்திரங்களைப் பெறுவதற்கு இதுவரை வெர ஹெர வரை செல்ல வேண்டியிருந்தது.
இந்த நிலையிலேயே சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தப் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரி விக்கப்பட்டுள்ளது.
FOR SELVA
08 2024 8:43 a.m.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
