தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
6 months ago


தமிழ் மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் மதத் தலைவர்களைச் சந்தித்து கலந்துரையாடி ஆசீர்வாதம் பெற்றுள்ளனர்.
நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தலைமையில் தமிழ் மக்கள் கூட்டணி கட்சி தனித்து யாழில் போட்டியிடுகிறது.
இதற்கமைய கட்சியின் முதன்மை வேட்பாளரான மணிவண்ணன் தலைமையில் போட்டியிடும் வேட்பாளர்கள் நல்லூர் ஆதீன குருமுதல்வர் மற்றும் யாழ்.ஆயர் உள்ளிட்ட மதத் தலைவர்களைச் சந்தித்தனர்.
இதன்போது தேர்தல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடிதுடன் மதத் தலைவர்களிடம் ஆசீர்வாதத்தையும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து கட்சியின் தேர்தல் பிரசார பணிகளை முழு வீச்சில் முன்னெடுக்க உள்ளதாக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவித்தார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
