யாழ்ப்பாண தமிழர்களை போல் தமிழை யாரும் நேசிக்கவில்லை சென்னை- உயர் நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார்

5 months ago


யாழ்ப்பாணத் தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். சுரேஷ்குமார் தெரிவித்தார்.

உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் மதுரை சட்டத்தரணிகள் சங்கம் சார்பில் சட்டத்தரணி பிரபுராஜதுரை எழுதிய "நும்மி னும் சிறந்தது நுவ்வை" என்ற நூல் அறிமுக விழா நடைபெற் றது. இந்த நிகழ்வில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஆங்கிலம் பிழைப்புக்கான மொழி, ஆங்கில மொழியை தவிர்த்துவிட்டு பிழைப்பு நடந்த முடியாத அளவுக்கு ஆங்கிலம்

நம் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்டது. பிழைப்பு என்ற விஷயத்தை தாண்டி பிறப்பு, வளர்ப்பு, வாழ்க்கை, முகவரி என வரும்போது நமக்கு துணை வருவது தமிழ் தான்.

நமக்கு முகவரியாகவும். முக மாகவும் இருக்கும் தமிழ் மொழியை கற்க வேண்டும். அதற்காக தமிழில் புலமை பெற வேண்டிய அவசியம் இல்லை. எண்ணிலடங்கா தமிழ் இலக்கியத்தில் ஏதாவது ஓர் இலக்கி யத்தை படித்துவிட்டாலே பிறந்த பலனை அடைந்ததாக அர்த்தம்.

இன்றைய தொலைக்காட்சி கள், பத்திரிகைகள், மேடைப் பேச்சாளர்களை நம்பி தமிழ் மீது நாட்டம் கொள்ள முடியுமா? அவர்கள் பேசுவது முழுவதும் தமிழ் அல்ல. முழுக்க முழுக்க தமிழில் பேசுவது. உரையாடுவது, அலுவல் பணி தவிர அனைத்து செயல்களையும் தமிழில் செய்வதும். தமிழை பரப்புவதும் இலங்கையைச் சேர்ந்த யாழ்ப்பாணத் தமிழர்கள் தான். யாழ்ப்பாணத் தமிழர்களைப் போல் தமிழ் மண்ணில் பிறந்தவர்கள் தமிழை நேசிக்கவில்லை. கொண்டாடவில்லை.

தமிழ் இலக்கியங்களை படிக்க வேண்டும். திருக்குறளை படித்தால் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மீது பற்றும், ஈர்ப்பும் வரும்- என்றார்.