சீனாவுக்கு வீசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்று 9 நாடுகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

1 month ago



சீனாவுக்கு வீசா இல்லாமல் பயணம் செய்ய முடியும் என்று 9 நாடுகளுக்கு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சுற்றுலாவை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

கொரோனா பெருந்தொற்று காரணமாக முடங்கி கிடந்த              சுற்றுலாத்துறை தற்போது புத்துயிர் பெற்றுள்ளது.

இதன்படி பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் 9 நாடுகளின் சுற்றுலாப் பயணிகளுக்கு வீசா தேவையில்லை என்று சீனா அறிவித்துள்ளது.

அந்த வகையில் ஜப்பான், பல்கேரியா, ருமேனியா, மால்டா, குரோஷியா, மொண் டினீக்ரோ, வடக்கு மெசிடோனியா, எஸ்டோனியா, லாட்வியா ஆகிய நாடுகளுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளதாக சீனா வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்தார்.