ரெலோ சிறீசபாரத்தினத்தின் சிலை வவுனியாவில் திறப்பு

6 months ago

தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ அமைப்பின்) தலைவர் சிறீசபாரத்தினத்தின் சிலை நேற்று வவுனியா நகர மத்தியில் உள்ள மணிக்கூட்டுக்கோபுரத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது.

கட்சியின் தலைவர் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனினால் சிலை திறந்து வைக்கப்பட்டது.

நினைவுக்கல்லை கட்சியின் செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரன் மற்றும் கட்சியினுடைய உப தலைவர் ஹென்றி மகேந்திரன் ஆகியோர் இணைந்து திரை நீக்கம் செய்து வைத்தனர்.

இதனை அடுத்து சிறீசபாரத்தினத்தின் சிலைக்கு கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலியும் செலுத்தினர்.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தேசிய அமைப்பாளர் பிரசன்னா, புளொட் அமைப்பின் முக்கியஸ்தர்கள், ஈ.பி.ஆர்ஸ்.எல்.எவ். கட்சியினுடைய முன்னாள் மாகாண சபை உறுப்பினர். தமிழரசு கட்சியின் வவுனியா மாவட்ட பிரதிநிதிகள், தமிழீழ விடுதலை இயக்கத்தினுடைய ஆரம்பகால போராளிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.