கடந்த 11 மாதங்களில் அரச தலைவர் நிதியத்தில் இருந்து 300 கோடி ரூபா நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
3 months ago

கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வரையான 11 மாதங்களில் அரச தலைவர் நிதியத்தில் இருந்து பல்வேறு நபர்களுக்கு சுமார் 300 கோடி ரூபா நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சிறப்பு செய்தி ஒன்றை வெளியிட் டுள்ள பிபிசி, பல்வேறு நபர்களின் மருத்துவ உதவிகளுக்காக ஜனாதிபதி நிதியத்தில் இருந்து 58 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உயர்தரக் கல்வி உதவித் தொகையாக 32 கோடி ரூபாயும், மகாபொல உதவித் தொகையாக 16 கோடி ரூபாயும், சிறுவர்களின் நலனுக்காக 15 கோடி ரூபாயும், துறவி கல்விக்காக 3 கோடி ரூபாயும் செலுத்தியுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்கங்களின் அமைச்சர்கள் அரச தலைவர் நிதியத்தில் இருந்து பல கோடி ரூபாவை மருத்துவ உதவியாக பெற்றுள்ளதாக அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
