இலங்கை முன்னாள் அமைச்சர்கள் சிலர் தம்மிடம் லஞ்சம் கோரியதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் முறைப்பாடு
3 months ago

முன்னைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் சிலர் தம்மிடம் லஞ்சம் கோரியதாக வெளிநாட்டுத் தூதுவர்கள் சிலர் முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
இலங்கைக்கான தென்கொரியத் தூதுவர் நியோன் லீ மற்றும் இலங்கைக்கான அவுஸ்திரேலியத் தூதுவர் போல்ஸ் ஸ்ரீபன் ஆகியோரே முன்னைய அரசாங்கத்தில் இருந்த அமைச்சர்கள் தம்மிடம் லஞ்சம் கோரினார்கள் என்று முறையிட்டுள்ளனர்.
முத்துராஜவனம் தொடக்கம் கட்டுநாயக்க விமான நிலையம் வரையிலான எரிபொருள் குளாய்களைப் பொருத்துவதற்காகத் தம்மிடம் லஞ்சம் கோரப்பட்டதாக தென்கொரியத் தூதுவர் நியோன் லீ தெரிவித்துள்ளார்.
முறைப்படி அனுமதியைப் பெற்று தமது திட்டங்களை முன்னெடுத்த போதிலும், இலங்கையின் அமைச்சர்கள் தமது திட்டங்களை நிறைவேற்ற இழுத்தடித்தனர்.
இறுதி அனுமதியை வழங்குவதற்குப் பின்னடித்தனர் என்றும் தென்கொரியத் தூதுவர் மேலும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
