யாழ்.தையிட்டி விகாரைக்கான காணியை சுவீகரிக்க நிலஅளவீடு செய்து வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

4 months ago


ஜனாதிபதித் தேர்தல் பரப்புரை தீவிரமடைந்துள்ள நிலையில் தையிட்டி விகாரைக்கான காணியை சுவீகரிக்க நிலஅளவீடு செய்து வரைபடமும் சமர்ப்பிக்கப்பட்டுள் ளது என்று தெரியவந்துள்ளது.

தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் தையிட்டி கிராமத்தில் மக்களுக்கு சொந்தமானது என்று கருதப்படும் நிலத்தில் விகாரை கட்டப்பட்டுள்ளது. விகாரை அமைந் துள்ள பகுதியில் சுமார் 6 ஏக்கர் நிலத்தை சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்தக் காணியை முன்னர் அளவீடு செய்வதற்கு காணி உரிமையாளர்களும் அரசியல் வாதிகளும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், மாவட்ட நில அளவை திணைக்கள அதிகாரிகள், அளவீடு மேற்கொள்ளாமல் திரும்பியுள்ளது டன் அறிக்கை சமர்ப்பித்தனர்.

இந்த நிலையில், நில அளவைத் திணைக்களத்தின் தலைமைப் பணிமனை அதிகாரிகள் கொழும்பில் இருந்து வருகை தந்து அளவீட்டை மேற்கொண்டு அதன் வரைபடத்தை தெல்லிப்பழை பிரதேச செயலாளரிடம் கையளித்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் உள்ள காணிகளின் உரிமையாளர்களை அடையாளம் காணமுடியவில்லை எனவும் ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய பதிவுகள்