
கிளிநொச்சி - பளை, கச்சார்வெளி தான் தோன்றி பிள்ளையார் கோவில் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழம் 6 இலட்சம் ரூபாய்க்கு நேற்று ஏலம்போயுள்ளது.
கச்சார் வெளி தான்தோன்றி பிள்ளையார் ஆல யத்தின் வருடாந்த மகோற்சவம் கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி, திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், 5ஆம் திருவிழாவான மாம்பழத் திருவிழா நேற்று நடைபெற்றது.
மாம்பழத் திருவிழாவில் வசந்தமண்டப் பூசைகள் நிறைவுபெற்றதும், விநாயகப்பெரு மானின் பூசைக்கு வைக்கப்பட்ட மாம்பழங்கள் இரண்டு ஏலத்தில் விடப்பட்டுள்ளன.
இதன்போது பக்தர்கள் ஏலம் விலைகூறி இறுதியாக 6 இலட்சம் வரை சென்ற நிலை யில், கச்சார் வெளியினை சேர்ந்த அரியகுட்டி வள்ளிப்பிள்ளை பூலோகம் குடும்பத்தினர் மாம்பழத்தை ஆறு இலட்சம் ரூபாவிற்கு பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
