கனடாவின் ஒன்ராறியோ மாகாண காப்பக நிர்வாகத்தின் குளறுபடிகளால் ஒவ்வொரு மூன்று நாட்களுக்கும் சிறார் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பகீர் தகவல் வெளியாகியுள்ளது.
மாகாண நிர்வாகம் பதிவு செய்திருந்த கனேடிய அரசாங்கத்தின் கீழ் செயல்படும் காப்பகங்களில் வசிக்கும் போதே சிறார்கள் மரணமடைந்துள்ளனர். மட்டுமின்றி சிறார்கள் மரணம டைந்த 12 மாதங்களில் விசாரணையும் முடித்து வைக்கப்பட்டுள்ளது.
தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல், அரசாங்கம் அதன் அடிப்படையான கடமைகளில் இருந்து தவறியதாகவே சமூக ஆர்வலர்களால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளில் சேக ரிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய அறிக்கை களில், சிறார்களின் இறப்பு, அதற்கான தரவுகளில் இருந்தே இந்தத் தகவல் அம்பலமாகியுள்ளது.
கடந்த 2020 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில் சுமார் 354 சிறார்கள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. காரணம், வயது உள்ளிட்ட மொத்தத் தரவுகளும் பதிவாகியுள்ளன.
இந்த விவகாரத்தில் தற்போது மூன்று ஆண்டுகளுக்கான தரவுகள் மட்டுமே வெளியாகியுள்ளன. 2020 இல் காப்பகம் தொடர்பாக 104 சிறார் கள் மரணமடைந்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விரிவான அடிப்படையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என ஒன்றாறியோ மாகாண குறைகேள் அதிகாரி போல் டுபே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக அனுமதி பத்திரமற்ற சிறுவர் நலன்புரி நிலையங்களில் சிறுவர்கள் தங்க வைக்கப்படுவது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல எனவும் அவர்களது பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இவ்வாறு பாதுகாப்பற்ற இடங்க ளில் சிறுவர்கள் தங்க வைக்கப்படு வதனால் அவர்களின் நடத்தை தொடர்பான பிரச்சினைகள் எதிர்காலத்தில் எழக்கூடுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.