அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன்.-- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுக்கு கிம் ஜாங் உன் விடுத்த பகிரங்க எச்சரிக்கை!
அமெரிக்கா மற்றும் தென்கொரியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவேன் என்று வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நேற்றைய தினம் (07-10-2024) 'கிம் ஜாங் உன்' பல்கலைக்கழகத்தில் நடந்த அரச நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் மேலும் தெரிவிக்கையில்
நமக்கு எதிராக அவர்கள் ஆயுதப்படையை உபயோகித்தால் எந்த தயக்கமும் இல்லாமல் எதிரிகள் மீது தாக்குதல் நடத்தும் திறன் நம்மிடம் உள்ளது.
தாக்குதல் என்று நான் சொன்னதில் அணு ஆயுதங்களும் அடங்கும் என்று தெரிவித்துள்ளார்.
குறித்த எச்சரிக்கையானது தென் கொரிய இராணுவம் அமெரிக்க இராணுவத்துடன் இணைந்து கூட்டாக அணு ஆயுத விவகாரங்களில் செயல்பட்டு வரும் சூழலுக்கிடையில் கிம் ஜாங் உன் தரப்பில் இருந்து வந்துள்ளதாகவும் பார்க்க வேண்டியுள்ளது.