ஜப்பானில் சிரிப்புத் திருவிழாவில் பங்கேற்ற மக்கள் சிரித்து இந்த ஆண்டின் கவலைகளை மறந்தனர்.

2 weeks ago



ஜப்பானில் சிரிப்புத் திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற மக்கள் உரக்க சிரித்து இந்த ஆண்டில் ஏற்பட்ட கவலைகளை மறந்தனர்.

சிரிப்பை குறிக்கும் வார்த்தைகள் கொண்ட பதாகைகளை ஏந்தி மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜப்பானில் லிபரல் கட்சி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அந்த நாட்டின் பிரதமராக ஷிகெரு இஷிபா உள்ளார்.

இந்த நிலையில் மக்களின் உடல், மனநலனைக் காக்கும் பொருட்டு ஒரு நாளுக்கு ஒரு முறையாவது அவர்கள் சிரித்திட வகை செய்யும் வகையில் புதிய சட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்தின் எட்டாவது நாள், "சிரிப்பின் மூலம் ஆரோக்கியம் மேம்படும் நாள்" எனக் கொண்டாடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகமாக சிரிப்பவர்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாள் வாழ்வதாக யம கட்டா பல்கலைக் கழகத்தால் நடத்தப்பட்ட ஆய்வில் கண்டறியப்பட்டது.

மன இறுக்கத்தை சிரிப்பு பயிற்சி குறைப்பதுடன் இதயப் பாதிப்பு உள்ளிட்ட தீவிரப் பாதிப்புகளிலிருந்து பாதுகாப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறினர்.

இந்த நிலையில் 2025 புத்தாண்டு பிறக்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், 2024 ஆம் ஆண்டில் பட்ட வேதனைகள், சோகங்களை மறக்கும் வகையில் ஜப்பானில் ஒசாகாவில் ஒருவருக்கொருவர் சிரித்து மகிழும் திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். சுமார் 20 நிமிடங்கள் வரை வாய்விட்டு சிரித்து மக்கள் தங்கள் கவலைகளை மறந்தனர். 

அண்மைய பதிவுகள்