இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழு மட்டக்களப்பு விஜயம்

2 months ago



இலங்கை நாட்டுக்கான ஜப்பானிய தூதுவர் அக்கியோ இசோமட்டா உள்ளிட்ட தூதுவராலய அதிகாரிகள் குழுவினர் நேற்று (23) திகதி மட்டக்களப்பிலுள்ள பல சுற்றுலாத்தலங்கள் உள்ளிட்ட சமய தலங்களையும் பார்வையிட்டுள்ளனர்.

இதன் போது குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் மட்டக்களப்பில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த சுற்றுலாத்தலமாக திகழும் ஒல்லாந்தர் கோட்டையை பார்வையிட்டதுடன், மட்டக்களப்பின் சிறப்பம்சங்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார். 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கான தமது விஜயம் தொடர்பில் தாம் மகிழ்ச்சியடைவதாகவும் இதன்போது தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த தூதுவர் உள்ளிட்ட குழுவினர் நேற்றைய தினம் திருகோணமலை மாவட்டத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்