கிழக்கு மாகாணத்தின் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

3 months ago


கிழக்கு மாகாணத்தின் வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

கிழக்கு மாகாண பாடசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்றங்களில் பல முறைகேடுகள் இருப்பதாகக் கூறி இலங்கை ஆசிரியர் சங்கங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்னாண்டோ உட்பட பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களால் கல்முனையிலுள்ள மாகாண மேல் நீதிமன்றத்தில் கட்டாணை மனு கடந்த மே மாதம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

2024 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஆசிரியர் இடமாற்ற விடயங்களில் ஆசிரியர் இடமாற்ற சபை மற்றும் ஆசிரியர் இடமாற்ற மேன்முறையீட்டு சபை ஆகியன சரியாகக் கட்டமைக்கப்படவில்லை என்றும் கிழக்கு மாகாண ஆசிரியர் இடமாற்றக் கொள்கைக்கு முரணாக ஆசிரியர் இடமாற்றங்கள்            இடம்பெற்றிருப்பதாகவும் கூறி    தங்களது இடமாற்றங்களை இரத்து செய்யக் கோரியும் தங்களது மனுவில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது,                     பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான கிழக்கு மாகாண சபை சட்டத்தரணிகள்,           பாதிக்கப்பட்ட அனைத்து மனுதாரர்களினதும் இடமாற்றங்களை இரத்துச் செய்வதாகவும் அவர்கள் இடமாற்றத்துக்கு முன்னர் எந்தப் பாடசாலைகளில் கற்பித்தார்களோ அந்தப் பாடசாலைகளில் அவர்களை மீள பணிக்கு அமர்த்துவதற்கும் எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை கண்டிப்பாக பின்பற்றி இடமாற்றங்கள் செய்வதாகவும் உறுதியளித்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கைத் தாக்கல் செய்த        பாதிக்கப்பட்ட 14 ஆசிரியர்களின் இடமாற்றங்கள் இரத்து                  செய்யப்பட்டன.