அரசாங்கம் சில பொருட்களின் விலையை குறைத்தாலும், நுகர்வோருக்கு பயனில்லை.- ரஞ்சித் விதான தெரிவிப்பு.
அரசாங்கம் சில பொருட்களுக்கான விலையை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளபோதிலும் அதன் பயன் நுகர் வோரை சென்றடைவதில்லை என தேசிய நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதான தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
தற்போது அரசாங்கம் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது.
ஆனால் அந்த பொருட்களின் விலை குறைப்பின் பயன் மக்களைச் சென்றடைவதாக தெரியவில்லை.
முட்டை விலை ஒரு வார காலத்துக்கு குறைந்திருந்தாலும் கூட தற்போது சந்தையில் முட்டை விலை அதிகரித்துள்ளது.
அதேபோன்று முட்டை விலை குறைக்கப்பட்டாலும் கூட சலுகை விலையில் நுகர்வோரால் முட்டையை பெற்றுக் கொள்ள முடியாத நிலையே காணப்பட்டது.
ஹோட்டல் உரிமையாளர் மற்றும் பேக்கரி உரிமையாளர் பழைய விலைக்கே பொருட்களை விற்பனை செய்கின்றனர்.
பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டாலும் அந்த விலை. குறைப்பு நுகர்வோரை சென்றடைவதில்லை.
இது தொடர்பில் கண்காணிக்க நுகர்வோர் அதிகார சபை உள்ளது. ஆனால் நுகர்வோர் அதிகார சபைக்கு தலைவர் இல்லை.
இத்தகைய பின்னணியில் அரசாங்கம் வழங்கும் நிவாரணம் நுகர்வோரை சென்றடைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஆகவே அரசாங்கம் இந்த விடயத்தில் தலையீட்டை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும்- என்றார்.