இந்திய அமைச்சர் இலங்கை பிரதமர் ரணில், சஜித் மற்றும் அரச தரப்பினரையும் சந்தித்தும் பேசினார்.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் பிரதமர் ஹரிணி உள்ளிட்ட அரச தரப்பின ரையும் முன்னாள் ஜனாதிபதி ரணில், முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் ஆகியோரை நேற்று சந்தித்துப் பேசினார்.
நேற்று வெள்ளிக்கிழமை கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சரரை நாட்டின் வெளிவிவகார செயலர் அருணி விஜயவர்த்தன, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோர் வரவேற்றனர்.
முதலில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை அவரின் அமைச்சு பணிமனையில் சந்தித்து வாழ்த்துத் தெரிவித்து உரையாடினார் ஜெய்சங்கர்.
இந்தச் சந்திப்பில் இலங்கை - இந்திய நலன் சார்ந்த பல விடயங்கள் குறித்து பேசப்பட்டன.
அயல்நாட்டுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை தொடர்பிலும் விவாதிக்கப்பட்டதாகத் தெரிய வருகின்றது.
இந்திய வெளிவிவகார அமைச்சர் சு. ஜெய்சங்கர் நேற்றைய தனது பயணத்தில் பிரதமர் ஹரிணி அமரசூரிய, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ ஆகியோரையும் சந்தித்துப் பேச்சு நடத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.