யாழ்.கொடிகாமம் புத்தூர்ச் சந்தியை அண்மித்த பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

13 hours ago



யாழ்.கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புத்தூர்ச் சந்தியை அண்மித்த பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவர் ரயிலுடன் மோதுண்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை மதியம் நடந்த இச் சம்பவத்தில் யாழில் இருந்து புறப்பட்ட ரயிலுடன் பாதுகாப்பற்ற ரயில் பாதையில் மோதுண்டே மேற்படி இளைஞன் உயிரிழந்துள்ளார்.

இதில் அல்லாரைப் பகுதியைச் சேர்ந்த 18 வயதான இளைஞன் ஒருவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.