இலங்கையில் சீரற்ற காலநிலையால் 76 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு. அனர்த்த நிலையம் தெரிவிப்பு

2 months ago



சீரற்ற காலநிலையால் நாட்டின் 11 மாவட்டங்களில் 76 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

களனி கங்கையின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பலத்த மழையால் கிளிநொச்சி, கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, பொலநறுவை, அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கடும் மழையால் களனி கங்கையின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்வடைந்து வருவதுடன், அதன் தாக்கத்தினால் மல்வான,தொம்பே, கடுவலை உட்பட பல பிரதேசங்களின் தாழ் நிலங்களும் பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதேபோன்று, கொலன்னாவை, வெல்லம்பிட்டி கொஹிலவத்தை உட்பட பல பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன்.

சீரற்ற காலநிலை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.