யாழ்.மணியந்தோட்டத்தில் பெண்களுடன் அநாகரிகமாக நடந்தோரை எச்சரித்த பஸ் சாரதிமீது வாள்வெட்டு!

3 months ago


யாழ். மத்திய பஸ் நிலையத்துக்கு அருகில் பெண்களுடன் சேட்டை புரிந்த இளைஞர்களை எச்சரித்த தனியார் பஸ் சாரதி மீது வாள் வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

பஸ் சாரதியான வினாசித்தம்பி ஜெகதீஸ்வரன் என்பவர் மீதே நேற்று முன்தினம் திங்கட்கிழமை வாள் வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

கொழும்புத்துறைப் பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பஸ்ஸில் பயணிகளை ஏற்றி வந்தவேளை மணியந்தோட்டம் பகுதியில் பஸ்ஸை மறித்து சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தாக்குதலில் காயமடைந்த சாரதி யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த வாரம் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு அருகில் 04 பேர் கொண்ட கும்பல் ஒன்று, பஸ் நிலையத்துக்கு வரும் பெண்களுடன் அநாகரிகமாக நடந்து கொண்டு தொந்தரவு செய்துள்ளது.

இதனை அவதானித்த சாரதி, குறித்த இளைஞர்களை கடுமையாக எச்சரித்து அங்கிருந்து அப்புறப்படுத்தி இருந்தார்.

இந்நிலையில், அன்றைய தினம் பெண்களுடன் அநாகரிகமாக நடந்துகொண்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்து, பயணிகள் சேவையில் ஈடுபட்டிருந்த பஸ்ஸை மறித்து வாள் வெட்டு தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச்          சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.



அண்மைய பதிவுகள்