தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

1 month ago



தேசிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியலில் அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களை கைப்பற்றியது.

அந்தக் கட்சிக்கு தேசிய பட்டியல் மூலமாக 18 ஆசனங்கள் கிடைத்தன.

தேசியப் பட்டியலின் மூலம் பாராளுமன்ற உறுப்புரிமையை பெறுபவர்களின் விவரங்களை தேசிய மக்கள் சக்தி நேற்று அறிவித்தது.

இதன்படி, வடக்கு மாகாணத்தில் அந்தக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் இராமலிங்கம் சந்திரசேகரம், வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட ஆர். எச். உபாலி சமரசிங்க, கிழக்கு மாகாணத்தில் அம்பாறையைச் சேர்ந்த அபூபக்கர் ஆதம் பாவா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இவர்கள் தவிர, பிமல் ரத்நாயக்க, மருத்துவர் அநுர கருணாதிலக, பேராசிரியர். உபாலி பன்னிலகே, எரங்க உதேஸ் வீரரத்ன, அருணா ஜெயசேகர, மருத்துவர் ஹர்ஷன சூரியப்பெரும, ஜனித ருவன் கொடித்துவக்கு, புண்ய சிறீ குமார ஜெயக்கொடி, மருத்துவர் நஜித் இந்திக்க, சுகத் திலகரத்ன, சட்டத்தரணி லக்மாலி ஹேமச்சந்திர, சுனில் குமார் கமகே, காமினி ரத்நாயக்க, பேராசிரியர். ருவன் சமிந்த ரணசிங்க, சுகத் வசந்த டி சில்வா ஆகியோர் தேசிய பட்டியல் எம். பிக்களாகின்றனர்.

அண்மைய பதிவுகள்