இலங்கை அரசு 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனைப் பெற்று என்ன செய்தது. லங்கா ஜனதா கட்சியின் தலைவர் கேள்வி

2 months ago



இலங்கை அரசாங்கம் 52 ஆயிரம் கோடி ரூபாய் கடனைப் பெற்று என்ன செய்துள்ளது என லங்கா ஜனதா கட்சியின் தலைவர் அக்மீமன தயாரத்தன தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பி னார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

அரசாங்கம் ஆட்சிக்கு வந்து மூன்று வாரங்கள் கடந்துள்ளன. இத்தகைய பின்னணியில் அரசாங்கம் 52 ஆயிரம் கோடி ருபாய் கடனை பெற்றுக்கொண்டுள்ளது.

52 ஆயிரம் கோடி ருபாய் பணத்தைப் பெற்றுக் கொண்டு அரசாங்கம் என்ன செய்துள்ளது என வினவ விரும்புகின்றோம்.

நாட்டு மக்களிடம் சூறையாடப்பட்ட பணம் உகண்டாவில் இருப்பதாக கூறினர்.

அதேபோன்று தாம் ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணத்தை நாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்போம் என கூறினர்.

குறைந்த பட்சம் உகண்டாவில் உள்ள பணத்தையேனும் நாட்டுக்கு கொண்டு வந்திருக்கலாம் அல்லவா-என்றார். 

அண்மைய பதிவுகள்