தலைவர் பற்றிய சிறு குறிப்பு: [அறிந்ததும்,அறியாததும்]
தந்தை: வேங்கடம் வேலிப்பிள்ளை, தாய்: பார்வதி வேலுப்பிள்ளை சகோதரர்கள்: ஒரு அண்ணர், (மனோகரன்) இரண்டு அக்காமார்.தற்போது இவர்கள் புலம்பெயர் நாடொன்றில் வாழ்கின்றனர். தலைவர் பிறந்தது: 26, நவம்பர்,1954 யாழ்ப்பாணம் இணுவில் வைத்தியசாலையில் பிறந்தார்.
இவருக்கு தமது அண்ணரின் பெயருடன் ஒத்துப்போக “அரிகரன்” என்ற பெயரை வைப்பதற்கு முதலில் அவருடைய தந்தையார் விரும்பினார் பின்னர் அவர்களுடைய குடும்ப விருப்பமாக “பிரபாகரன்” எனும் பெயர் சூட்டப்பட்டது,
சொந்த ஊர் :வல்வெட்டித்துறை தந்தையாரின் தொழில்: காணி அலுவலர்.(Land Officer). தந்தையார் அநுராதபுரத்தில் கடமையாற்றிய பின்னர் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் (அப்போது கச்சேரி) இடமாற்றம் கிடைத்தது 1957ம் ஆண்டு காலப் பகுதி.
அவர்கள் அப்போது வாடகை வீட்டில் வசித்த இடம்: மட்டக்களப்பு தாமரைக்கேணி.இங்கு தாய், தந்தை, மகன் (பிரபாகரன்) மூவரும் வசித்தனர்,
ஏனைய சகோதரர்கள் பாடசாலை கல்விக்காக தொடர்ந்தும் யாழ் வல்வட்டித்துறையில் வாழ்ந்தனர்.
தலைவரின் ஆரம்பக்கல்வி: மட்டக்களப்பு அரசடி தமிழ் கலவன் வித்தியாலயம் ( தற்போது அரசடி மகாஜனக் கல்லூரி)
பாலர் வகுப்புத் தொடக்கம் மூன்றாம் வகுப்பு வரை இந்த பாடாசலையில் படித்தார்.
நான்காம் ஆண்டு படிப்புக்கு முன்னர் தமது தந்தைக்கு யாழ்ப்பாணத்தில் இடமாற்றம் கிடைத்தமையால் பின்னர் நான்காம் வகுப்பு தொடக்கம் யாழ்ப்பாணம் வல்வட்டித்துறை சிதம்பரக் கல்லூரியில் கல்வியை தொடர்ந்தார்.
தலைவருக்கு ஆரம்பக் கல்வியை ஊட்டிய மட்டக்களப்பு மண் பெருமை அடைகிறது..!
நாமும் பெருமை கொள்வோம்..!
அவருடைய 70, வது பிறந்த நாளில் இந்த வரலாற்றை மற்றவர்கள் குறிப்பாக இளைஞர்கள் அறிவதற்காக மீள் பதிவு செய்கிறேன்..
-பா.அரியநேத்திரன்-
26/11/2024,