யாழ்.சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கு மிரட்டல் விடுத்தவரை தேடி விசாரணை.-- சாவகச்சேரி பொலிஸார் தெரிவிப்பு
யாழ்.சாவகச்சேரி நீதிவான் நீதி மன்றத்துக்கு மிரட்டல் விடுத்தவரை தேடி விரிவான விசாரணைகள் ஆரம்பித்துள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சாவகச்சேரி பொலிஸ் நிலையத்துக்கு கடந்த 29ஆம் திகதி அடையாளம் தெரியாத ஒருவர் தொலைபேசி அழைப்பு எடுத்து நீதிமன்றில் தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று தகவல் வழங்கியுள்ளார்.
இதையடுத்து சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
எவ்வாறாயினும், குறித்த தொலைபேசி அழைப்பை வழங்கிய நபர் யார் என்பது இதுவரையில் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பொலிஸாரை தவறாக வழிநடத்தும் நோக்கில் இந்த தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கலாம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சந்தேகநபர் தொடர்பில் தற்போது விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
போனில் தகவல் வந்ததாக பொலிஸார் தெரிவித்திருக்கின்ற நிலையில் போனை வைத்து அவர்களை பிடிக்க முடியாமல் இருக்கின்றனர்.