ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்

6 months ago

ஜி7 மாநாட்டில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானுடனான சந்திப்பு குறித்து கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

இத்தாலியில் ஜி7 மாநாடு நேற்றுடன் முடிவடைந்தது.

இதில் அமெரிக்க ஜனாதிபதி ஜோபைடன், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான், கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரானைச் சந்தித்துப் பேசினார்.

அதனைத் தொடர்ந்து கனடா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் கூட்டணி குறித்து ட்ரூடோ பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், "கனடாவும், பிரான்ஸும் இப்போது அட்லாண்டிக்கடல் கடந்த பாதுகாப்பை வலுப்படுத்துவது, தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவது, நமது ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என மிக முக்கியமான வேலைகளில் கூட்டாளிகளாக உள்ளன.

இப்போது இதுதான் முக்கியமான வேலை. இந்த வாரம் ஜி7 மாநாட்டில் இமானுவல் மேக்ரானுடன் நான் விவாதிக்க நிறைய இருந்தது என்றார்.

அண்மைய பதிவுகள்