யாழில் கால்நடை வைத்திய அதிகாரி பிரிவில் விலங்குகளில் இருந்து இரத்த மாதிரிகள் பெறும் நடவடிக்கை முன்னெடுப்பு

2 weeks ago



யாழ்ப்பாணம், வடமராட்சி கரவெட்டி மற்றும் பருத்தித்துறை கால்நடை வைத்திய அதிகாரி பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் (19) விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்படும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

அண்மைக் காலமாக எலிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட பலர் பருத்தித்துறை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.

சிலர் உயிரிழந்தனர்.

இந்த நிலையில், எலிக் காய்ச்சல் விலங்குகளில் இருந்து பரவி இருக்கலாம் என்ற அச்சத்தில், தொற்றுநோயியல் பிரிவின் அறிவுறுத்தலுக்கு அமைய விலங்குகளிலிருந்து இரத்த மாதிரிகள் பெறப்பட்டன.

கண்டி பெரதேனியாவிலிருந்து வருகை தந்த விலங்கியல் பிரிவினர் எலிக் காய்ச்சல் நோயால் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, சுற்றுச் சூழல் பகுதிகளை ஆய்வு செய்ததுடன், அந்த பகுதிகளில் உள்ள விலங்குகளில் இருந்து இரத்த மாதிரிகளையும் பெற்றுக்கொண்டனர்.