டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இன்று நடைபெற்றது.
டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் (14.10.2024) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2024.10.13 ஆம் திகதி முதல் 2024.10.15 ஆம் திகதி வரையான டெங்குக் கட்டுப்பாட்டு களப்பரிசோதனை நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதற்கு அமைவாக, இன்றைய தினம் அனைத்து அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியாா் அலுவலகங்களில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பான அறிமுகம், டெங்கு நோயின் தற்போதைய நிலைமை, டெங்கு நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,டெங்கு நோய் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்களால் விழிப்புணர்வு கருத்துரை வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாாிகள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.